News May 22, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை புகார் எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இணைய வழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1930 அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் குற்றப்பிரிவு அலைபேசி எண் 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. போலியான இணையதள பக்கத்தில் உங்களது சுய விபரங்களை பதிவிடுவதால் உங்களது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் பறிபோக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எண் 1930 தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

News August 18, 2025

மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

image

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

மயிலாடுதுறை: கடையில் தீ விபத்து: ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மகாதான வீதியில் நேற்று தனியார் டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய நிவேதா எம் முருகன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்குஅறிதல் கூறினார். உடன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் என் செல்வராஜ் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!