News May 21, 2024
யோகி பாபுவின் ‘வானவன்’ படப்பிடிப்பு நிறைவு

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘வானவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குநர் சஜின் கே. சுரேந்திரன், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் வகையான படமாக இது இருக்கும் என்றும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும் என்றும் கூறினார். இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
Similar News
News November 20, 2025
பவன் மாதிரி விஜய் ஆகிவிடக் கூடாது: ரோஜா

விஜய், பவன் கல்யாண் மாதிரி இல்லாமல், MGR, ஜெயலலிதா, NTR போன்று இருக்க வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைந்த பவன், முதலில் போட்டியிடாமல் மற்றவர்களுக்காக வாக்கு கேட்டார். தற்போது TDP, BJP உடன் கூட்டணி அமைத்துள்ளார். அத்துடன், மக்கள் பணத்தில் ஹெலிகாப்டர் என்று வசதியாக வாழ்வதாகவும் ரோஜா விமர்சித்தார். எனவே, விஜய் சரியான திட்டமிடலுடன் அரசியல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
News November 20, 2025
ரஷ்யா – பிரிட்டன் இடையே மோதலா?

பிரிட்டனின் கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யாவின் கப்பலான ‘Yantar’, கண்காணிப்பு விமானிகள் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. ரஷ்யா இதை ஆராய்ச்சி கப்பல் என்று கூறினாலும், பிரிட்டன் ரஷ்யாவின் உளவு கப்பல் என குற்றஞ்சாட்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தெரியும் என கூறிய பிரிட்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் மூலம் இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News November 20, 2025
கவர்னரின் அடாவடி: CM ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக, மத்திய அரசை கண்டித்து INDIA கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், SIR மூலம் வாக்குரிமையை பறித்தும், Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைத்தும், மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னரின் அடாவடி என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


