News May 21, 2024
யார் இந்த வி.கே.பாண்டியன்? (1)

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழகத்தை தேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக பிரதமர் மோடி நேற்று விமர்சித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணமுடித்த பின்பு, அம்மாநில பணிக்கு மாறினார். 2011இல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் ஆனார்.
Similar News
News November 21, 2025
திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 21, 2025
ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.


