News May 21, 2024

மதுரை அரசு பொருட்காட்சி ஒத்திவைப்பு

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் நடைபெறவிருந்த அரசுப் பொருட்காட்சி -2024 கனமழை காரணமாக, நாளை மறுநாள் (23.05.2024) வியாழன் அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

ரூ.2.93 கோடி செலவில் தயாராகும் மதுரையின் குற்றாலம்

image

மதுரையின் குற்றாலம் என அழைக்கப்படும் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி சுற்றுலாத்துறையின் சீரமைப்புத் திட்டத்தில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் அனுமதி கிடைத்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மிதிவண்டி நிறுத்தம், நீர்நிலை மேம்பாடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தச் செய்தி மதுரை மக்களை குளிரச் செய்துள்ளன.தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News September 12, 2025

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா

image

மதுரை அழகர் கோவில் உபகோவில் ஆன தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான புரட்டாசி பெருந் திருவிழா வருகிற 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து முகூர்த்த நாள் நடப்படும். தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் தெப்ப உற்சவம் நான்காம் தேதி நடைபெறுகிறது.

News September 12, 2025

மதுரையில் 13, 14ம் தேதிகளில் தாயுமானவர் திட்டம்

image

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் வரும் 13, 14ம் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் வரும் மாதங்களில் மாதத்தின் 2வது சனி & ஞாயிற்றுக்கிழமைகளில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளளது.

error: Content is protected !!