News May 21, 2024
திருப்பூரில் தயார் நிலையில் தீயணைப்புத் துறையினர்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான கிராமப் பகுதிகளில் குட்டைகள் உடைந்து ஊருக்குள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக திருப்பூரில் 100 கமாண்டோ வீரர்களுடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News August 15, 2025
திருப்பூரில் சுதந்திர தின விழா; கலெக்டர் கொடியேற்றி வைத்தார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மணிஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் சமாதான புறா பறக்க விடப்பட்டது. தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
News August 15, 2025
திருப்பூர்: பஸ்ஸில் லக்கேஜை மறந்தால் என்ன செய்வது?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
News August 15, 2025
திருப்பூர் மக்களே..கவனமா இருங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. திருப்பூர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <