News May 21, 2024

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

image

மீஞ்சூர் அரியன் வாயல் அம்மா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த்-வள்ளி. இவர்களின் குழந்தை கீர்த்தனா (2) வீட்டின் அருகில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. மீஞ்சூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் இந்த <>லிங்கில் <<>>உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

திருவள்ளூரில் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் (7373004527) அல்லது உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974243>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

image

கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 32 அடியாக உள்ள ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி 73% நிரம்பியுள்ளது. விரைவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து மே 21 முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.

error: Content is protected !!