News May 21, 2024
இந்தியா உதவியை நாடும் இலங்கை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய இலங்கை ஆர்வம் தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் குழுவில் இணைய, இந்தியாவின் உதவியை நாடவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், UAE ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்திருப்பது பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரம் மற்றும் பங்களிப்பின் வலுவான அறிகுறியாகும் என்றார்.
Similar News
News November 20, 2025
தர்மபுரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை 04342-260042 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
செல்போன் ரீசார்ஜ் குறைந்தது.. அதிரடி ஆஃபர்!

மிக மலிவான வருடாந்தர பிளானை BSNL அறிவித்துள்ளது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ₹3,500-க்கும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், BSNL ₹2,399 ரீசார்ஜ் செய்தால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 365 நாள்கள் அன்லிமிடெட் அழைப்புகள், நாள்தோறும் 100 SMS மற்றும் 2 GB டேட்டா கிடைக்கும். ஆனால், நெட்வொர்க் பிரச்னைகளை தீர்க்காதவரை, இது போன்ற திட்டங்களால் பயனில்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
News November 20, 2025
டெல்லி குண்டு வெடிப்பில் பாக். சதி: ஒப்புக்கொண்ட PoK PM

டெல்லி கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக PoK PM சௌத்ரி அன்வாருல் ஹக் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனிநாடு கேட்கும் பலுசிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவது தொடர்ந்தால், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம் என முன்பு சொன்னோம். இப்போது, அல்லாவின் அருளால், எங்களுடைய தீரமிக்க வீரர்கள் அதை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


