News May 21, 2024

நெல்லை – பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

image

மே 22ம் தேதி முதல் ஜூன் மாதம் 13 தேதி வரை திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக யலஹங்கா (பெங்களூரு) வரை சிறப்பு இரயில் திருநெல்வேலி – யலஹங்கா (பெங்களூர்) புதன் கிழமையும், யலஹங்கா (பெங்களூர்) – திருநெல்வேலி – வியாழன் கிழமையும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Similar News

News July 4, 2025

நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 8, 2025

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி
மையம் செயல்படுகிறது. கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 அழைக்கலாம். பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பக்க அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், ராணி அண்ணா கல்லூரி ஆகிய 3 மையங்கள் செயல்படுகிறது. இத்தகவலை ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!