News May 21, 2024

கடலூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சிதம்பரம் அருகே உள்ள வத்திராயன்கொத்து கிராமத்தை சேர்ந்தவர் சம்மதம். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மஞ்சகொள்ளை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார்.  சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

கடலூர்: 8.5 சவரன் நகை மாயம்

image

புதுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர்(57) என்பவர், தனது மனைவி மகாலட்சுமியுடன் சிதம்பரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அரசு பேருந்து புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வந்தார். பின் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் இருந்து ஆட்டோவில் சென்றார்.அப்போது பையில் வைத்திருந்த 8 1/2 பவுன் நகை காணவில்லை. என தெரியவந்தது. பின் இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 8, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

புவனகிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிதம்பரம் பகுதியில் சேர்ந்த வாலிபரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

கம்மாபுரம்: மாணவி பட்டாசு பாம்பு மாத்திரை தின்று தற்கொலை

image

கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டிமூளையை சேர்ந்தவர் வீரப்பன் மகள் சகானா (17). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் வருடம் படித்து வரும் சஹானா வீட்டு வேலை செய்யாததால் அவரது தாய் சுபிகா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சஹானா தீபாவளி பட்டாசு பாம்பு மாத்திரை சாப்பிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!