News May 21, 2024

திருப்பூர் ஆண்களுக்கு ரூ.3100 ஊக்கத் தொகை

image

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நாளை (மே 22) நடைபெறுகிறது. கத்தியின்றி ரத்தமின்றி தழும்பின்றி 10 நிமிடத்தில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகளோ, இல்லற இன்பம் மற்றும் உடல் உழைப்புக்கு பாதகமோ என எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3100 வரை வழங்கப்படுகிறது.

Similar News

News November 5, 2025

திருப்பூர்: திருடு போன PHONE-னை கண்டுபிடிப்பது எப்படி?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News November 5, 2025

திருப்பூரில் இப்பகுதியில் மின்தடை

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 5, 2025

திருப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் விஜயமங்கலம் வாய்ப்பாடி அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடைப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!