News May 21, 2024
மயிலூற்று அருவியில் நீர்வரத்து

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள இலாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது இந்த அருவியில் நீர்வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்ட மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
பெரம்பலூர்: காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகளை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை காரை பிரிவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 15 கிலோ காப்பர் கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்புள்ள காப்பர் காயல்களை விற்றது தெரியவந்துள்ளது.
News November 9, 2025
பெரம்பலூர்: பட்டப் பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (38) தனது வயலில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொழுது, மர்ம நபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார். கூச்சல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்ற செந்தில் என்பவர் மர்மநபரை துரத்தி சென்றதால் மர்மநபர் அச்சமடைந்து நகையை கீழே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 9, 2025
பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது எனவும் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


