News May 21, 2024

சர்வதேச தேநீர் தினம் இன்று

image

தண்ணீருக்குப் பின் உலகளவில் அதிகம் அருந்தப்படும் பானம் தேநீர்தான். அதனைக் கொண்டாடும் விதமாக இன்று (மே 21) சர்வதேச ‘டீ’ தினம் கடைபிடிக்கப்படுகிறது. சோர்வைப் போக்க டீ, தூக்கத்தைப் போக்க டீ, மகிழ்ச்சியைக் கொண்டாட டீ, நண்பர்களுடன் சந்திப்புக்கு டீ, ஓய்வு நேரத்தில் டீ என்று தேநீர் குடிப்பதற்கு எந்தவொரு கால நேரமும் தேவையில்லை. டீ குடிப்போம்., உற்சாகத்தைப் பரப்புவோம்.

Similar News

News November 21, 2025

மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

image

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

News November 21, 2025

பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி: அமைச்சர்

image

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழுந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

News November 21, 2025

திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

image

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!