News May 21, 2024
நெல்லை: ரயில் அடிபட்டு முதியவர் பலி

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் ஜெகஜீவன் தெருவில் வசித்துவரும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சரிவர காது கேட்காத சண்முகம் நேற்று (மே 20) மாலை பஜாருக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவளத்தை கடந்தபோது, செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில் அவர் மீது மோதியதில் அவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News May 8, 2025
நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
News May 8, 2025
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி
மையம் செயல்படுகிறது. கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 அழைக்கலாம். பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பக்க அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், ராணி அண்ணா கல்லூரி ஆகிய 3 மையங்கள் செயல்படுகிறது. இத்தகவலை ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
News May 8, 2025
நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு: பாபநாசம் அணையில் 84.55 அடி

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம். பாபநாசம் அணையில் 84.55 அடி நீர் இருப்பு உள்ளது. 257 கன அடி நீர் வரத்து மற்றும் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 100.6 அடி, மணிமுத்தாறு அணையில் 85.47 அடி, வடக்கு பச்சையாறு அணையில் 40.25 அடி, நம்பியாறு அணையில் 13.12 அடி மற்றும் கொடுமுடி ஆற்றில் 14.75 அடி நீர் இருப்பு உள்ளது.