News May 21, 2024

18 லட்சம் சிம் கார்டுகளை பிளாக் செய்ய முடிவு

image

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 10,3192 கோடி ரூபாய் சைபர் மோசடி மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6,94,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சைபர் மோசடி தொடர்பாக 18 லட்சம் சிம் கார்டுகளைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறு சரிபார்ப்புக்கு பின், அடையாளம் காணப்பட்ட சிம் கார்டுகள் பிளாக் செய்யப்படவுள்ளது.

Similar News

News August 16, 2025

ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்

image

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு சரியானதாக மாற்றிவிடுவேன்.
* ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
* நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்.நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.

News August 16, 2025

ரஷ்யா போரை நிறுத்தாது: உக்ரைன் அதிபர் உருக்கம்

image

தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

error: Content is protected !!