News May 21, 2024
ரயிலில் முதல் வகுப்பில் பயணித்த நாய்

9 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய நாய் மேருவை கௌரவிக்கும் விதமாக ரயிலில் முதல் வகுப்பில் அதற்கு பெர்த் ஏற்பாடு செய்திருந்தது இந்திய ராணுவம். எல்லையில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற மேரு, மீரட்டில் உள்ள நாய்கள் காப்பகத்துக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. மேருவின் இத்தனை ஆண்டுகால அர்ப்பணிப்பை பாராட்டுவதாக இந்திய ராணுவம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
ராமதாஸுடன் புகைப்படம் எடுத்த அன்புமணி

பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே கடந்த சில தினங்களாகவே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தனது குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று மாலை அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேக் வெட்டும் நிகழ்விலும் அன்புமணி பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடனிருந்தார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
News August 16, 2025
ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு சரியானதாக மாற்றிவிடுவேன்.
* ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
* நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்.நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.
News August 16, 2025
ரஷ்யா போரை நிறுத்தாது: உக்ரைன் அதிபர் உருக்கம்

தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.