News May 21, 2024
ஒகேனக்கலில் எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி, பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் எம்எல்ஏ ஆய்வு நிகழ்ச்சி (மே.20) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இந்நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 20, 2025
தருமபுரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரியில் சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை 22.09.2025 முதல் நடைபெறும்.தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ தகவல். மாணவர் சேர்க்கை செயல்முறைகள் 30.09.2025 அன்று நிறைவுப்பெற்று வகுப்புகள் 06.10.2025 முதல் தொடங்கும். இதற்கான கலந்தாய்வு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி தருமபுரியில் நடைபெறும். தகவல் தொலைபேசி 04342-233600,7418844106 தொடர்பு கொள்ளலாம்
News September 20, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செ.19) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 19, 2025
தருமபுரி: தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க…

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வீடுகளில் பொருட்கள் எடுவும் திருடு போய் இருந்தால் இக்கோயிலில் உள்ள மரத்தில் கோழிகளை உயிருடன் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டால், கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க