News April 4, 2026

வாஷிங்டன் மேயர் போட்டியில் தேனி தமிழச்சி

image

தேனியை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு இவரது குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இதில் போட்டியிடுவதற்கு 4,500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று விண்ணப்பம் செய்துள்ளார். இது, தேவையான எண்ணிக்கையை விட அதிகமாம். வாழ்த்துகள்!

Similar News

News April 13, 2026

விவசாயத்திற்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலின் அரசு: EPS

image

மேகதாது விவகாரத்தை கையிலெடுத்து நாகை, மயிலாடுதுறையில் EPS பரப்புரை மேற்கொண்டார். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் அரசு, விவசாயத்திற்கு துரோகம் இழைப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறும் கர்நாடகா DCM டி.கே.சிவகுமார், ஸ்டாலின் நெருக்கமாக இருப்பதாக கூறி, மக்கள் மத்தியில் போட்டோவை காட்டி EPS விமர்சித்தார்.

News April 13, 2026

மகளிர் காங்., தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மோதல்

image

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், மகளிர் காங்., தலைவர் பதவியிலிருந்து ஹெசீனா ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நேற்று நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில் மகளிர் காங்., பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட தலைவர்கள், தங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மாநிலத் தலைவரை அறிவித்ததை ஏற்கமுடியாது எனக்கூறி நாற்காலிகளை தூக்கிவீசி மோதலில் ஈடுபட்டனர்.

News April 13, 2026

மீன்கள் விலை தாறுமாறாக எகிறியது.. மக்கள் அதிர்ச்சி

image

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை எகிறியது. 1 கிலோ வஞ்சிரம்: ₹1,300 – ₹1,600, பாறை: ₹600 – ₹700, சங்கரா: ₹600, கவளை: ₹200, இறால்: ₹500, கடம்பா: ₹200 – ₹400, கானாங்கத்த: ₹250 – ₹300 என விற்பனையாகிறது. வழக்கமான விலையை விட 3 மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது. ஏப்.14 முதல் ஜூன் 14 வரை மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடல் மீன்பிடிக்க தடை என்பதால் மேலும் விலை உயருமாம்.

error: Content is protected !!