News May 20, 2024
திருச்சி: 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த கோர்ட்

திருச்சியில் கடந்த 24.7.2019ம் தேதி ஒரு பெண்ணிடம் 6 1\2 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் கலையரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் புலன் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News July 5, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இங்கு <
News July 5, 2025
ஸ்ரீரங்கம் பெருமாள் தரிசனம் இல்லை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று முழுவதும் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலாது. மேலும், 9-ம் தேதி திருப்பாவாடை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு மேல் தான் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இயலும் என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்

வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (32) சேல்ஸ்மேன் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் அதிக பணம் இழந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.