News May 20, 2024
சவுக்கு ஜாமின் மனு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக பலரும் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்ததை தொடர்த்து அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த நிலையில் இன்று கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் ஜாமின் வழங்க மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை 27 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Similar News
News August 21, 2025
கோவை: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News August 21, 2025
கோவையில் 56 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.
News August 21, 2025
கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.