News May 20, 2024
சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

சவுக்கு சங்கரை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவையில் இருந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் மதுரைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதில், 7 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 2 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
Similar News
News November 20, 2025
உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.
News November 20, 2025
Cinema Roundup: ரஜினி படத்தில் இணைந்த அபேக்ஷா போர்வால்

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.
News November 20, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ₹5,000? புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிஹார் தேர்தலில், மகளிருக்கு தலா ₹10,000 வழங்கிய அரசின் திட்டம் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.


