News May 20, 2024
கோவை: 70 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த மே.1 முதல் மாவட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து இதுவரை 70.710 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
லாரி முன்பு பாய்ந்து பெண் தற்கொலை.

கோவை வால்பாறையை சேர்ந்தவர் தனலட்சுமி(40). இவர் கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று தனது ஆண் நண்பருடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென அவ்வழியே வந்த லாரி முன்பு பாய்ந்து விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
ரூ.15,000 பரிசு: கோவையில் VIRAL POSTER

கோவை கணபதி பகுதியை சேர்ந்த கதிர் குடும்பம் வளர்த்து வந்த வெள்ளை நிற கிராக்டேயில் “மியா” கிளி வகையைச் சேர்ந்த பறவை கடந்த அக்டோபர் 29-ல் பறந்துச் சென்றது. இதையடுத்து குடும்பத்தினர் கோவையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என்றும், அதை “மியா” அல்லது “PEEK-A-BOO” என்று அழைத்தால் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
News November 21, 2025
பாராளுமன்றம் முடக்கி மெட்ரோ வாங்குங்கள்: எஸ்.பி. வேலுமணி

கோவையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக எம்பிக்கள் இதற்காக பாராளுமன்றத்தில் போராடி முடக்கம் செய்ய வேண்டும் என்றும், 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி திட்டம் நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.


