News May 20, 2024
அடுத்தடுத்து வெளியாகும் கமல் படங்கள்

நடிகர் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘கல்கி 2898 AD’ படம் வரும் ஜூன் 27ஆம் தேதியும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ படம் இந்தாண்டு இறுதியிலும், ‘இந்தியன் 3’ படம் 2025 ஜனவரி மாதத்திலும் வெளியிட படக்குழுக்கள் திட்டமிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
ஜப்பான் மொழியில் உங்க பெயரை Spell பண்ணுங்க!

நியூஸ் படிச்சி, படிச்சி மூளை டயர்ட் ஆகிடுச்சா! ஜப்பானிய மொழியில் உங்களின் பெயரை எழுதி பாருங்க. இந்த எழுத்துக்களை ‘katakana’ சொற்கள் என்பார்கள். இதில், spell பண்ணி உங்க பெயர், உங்களுக்கு தெரிஞ்சவங்க பெயரை கமெண்ட் பண்ணுங்க. எது செம காமெடியாக இருக்கிறது என பார்ப்போம். இது விளையாட்டிற்காகவே தவிர, யார் மனதையும் புண்படுத்த அல்ல. SHARE IT.
News August 14, 2025
இருமடங்காக உயர்ந்த ஆம்னி பஸ் டிக்கெட்.. பயணிகள் அவதி

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் ₹1500 வசூலிக்கப்படும் என்றால், அது தற்போது ₹4000 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதனால் விடுமுறைக் காலங்களில் அரசு விரைவு பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News August 14, 2025
‘கூலி’ படத்தை பார்த்து ரசித்த CM ஸ்டாலின்

‘கூலி’ படத்தின் சிறப்பு காட்சியை நேற்று படக்குழுவுடன் CM ஸ்டாலின் கண்டு களித்துள்ளார். பின்னர் படக்குழுவை வெகுவாக பாராட்டிய ஸ்டாலின், அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இதனை X தளத்தில் பகிர்ந்த லோகேஷ், ‘கூலி’ படத்திற்காக CM கொடுத்த அன்பிற்கும், வாழ்த்திற்கும், மிகப்பெரிய நன்றி என தெரிவித்துள்ளார். முன்னதாக DCM உதயநிதி ஸ்டாலினும் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.