News May 20, 2024

பாஜக ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு

image

பாஜக ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பரப்புரை மேற்கொண்ட அவர், மோடியால் மட்டுமே நாட்டை முழு வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடியும் என்றார். மேலும், காங்., ஆட்சியில் விவசாய பட்ஜெட் ₹22,000 கோடியாக இருந்ததாகவும், ஆனால் 10 ஆண்டுகளில் தங்கள் ஆட்சியில் ₹1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News November 19, 2025

கள்ளக்குறிச்சி: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

image

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!

News November 19, 2025

பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு

image

பிஹாரின் அடுத்த CM ஆக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NDA கூட்டணி கட்சி MLA-க்களின் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்வான நிலையில், நாளை காலை 11:30 மணிக்கு நடைபெறும் விழாவில் CM ஆக பதவியேற்கிறார். இந்நிகழ்வில் PM மோடி, பாஜக முதல்வர்கள், MP-க்கள், MLA-க்கள் பங்கேற்கவுள்ளனர்.

News November 19, 2025

இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் : PM மோடி

image

இயற்கை விவசாயத்தின் பாதையில் இந்தியா பயணித்தே ஆக வேண்டும் என்று PM மோடி வலியுறுத்தியுள்ளார். ரசாயனம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட PM மோடி, அதை சரிசெய்வதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், வேளாண் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைத்திருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!