News April 3, 2026

தருமபுரி இளைஞர் உயிரிழப்பு

image

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 10, 2026

தருமபுரி: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தருமபுரி மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்யவும். SHARE செய்து உதவுங்க.

News April 10, 2026

தருமபுரி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 128 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதலுக்குப் பின் 83 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். பென்னாகரம் (22), அரூர் (14), தர்மபுரி (19), பாப்பிரெட்டிப்பட்டி (14) மற்றும் பாலக்கோடு (14) என மொத்தம் 83 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக, அதிமுக, பாமக தவெக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 08.04.2026 காலை 6.00 மணி முதல் 09.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!