News April 3, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹5,000.. காலையிலேயே மகிழ்ச்சி

கெளரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ₹25,000-லிருந்து ₹30,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதியை கல்லூரி கல்வி இயக்ககம் விடுவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் முதல் கெளரவ விரிவுரையாளர்களின் வங்கிக் கணக்கில் உயர்த்தப்பட்ட சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் மாதம்தான் ₹30,000 வரவு வைக்கப்படும் என தகவல் பரவிய நிலையில், இந்த திருப்பம் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
Similar News
News April 10, 2026
சங்கராபுரம்: திருமாவை சந்தித்த திமுக வேட்பாளர்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று(ஏப்.9) இரவு தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியனை நேரில் சந்தித்து வாழ்ந்து பெற்றார்.
News April 10, 2026
கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கனிமொழி ஏன் மவுனம் காக்கிறார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News April 10, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. காலையிலேயே HAPPY NEWS

தமிழக தேர்தலை முன்னிட்டு, காங்., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக PM Kisan திட்டத்தின் கீழ், விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நிலமுள்ள விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


