News May 20, 2024

தென்காசி: பழைய குற்றாலத்தில் மீண்டும் மழை

image

தென்காசி, பழைய குற்றாலம் பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பழைய குற்றாலம் அருவி மற்றும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Similar News

News September 8, 2025

தென்காசியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

தென்காசி: இங்கே உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு!

image

தென்காசி மாவட்ட வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை, சிறுபான்மையினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மாவட்ட வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி, நெடுஞ்சாலை, மகளிர் திட்டம், அறநிலையத்துறை உட்பட 19 துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அறிந்து கொள்ளுங்கள். *ஷேர்

News September 8, 2025

தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் (06061) புதன்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை அடைகிறது. மறுமார்க்கமாக (06062) வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. ஏசி, ஸ்லீப்பர், பொதுப்பெட்டிகள் உள்ள இந்த ரயிலை நிரந்தரமாக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!