News April 3, 2026

ராம்நாடு: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்.!

image

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News

News April 6, 2026

இராம்நாடு: What’s App ல் இலவச வக்கீல் சேவை

image

இராம்நாடு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

இராம்நாடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

இராம்நாடு: ஈரான் போர்… சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். போர் தொடங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், தமிழக மீனவ நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு 13 மீனவர்களை மீட்டனர். இதனால் தாயகம் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!