News April 2, 2026
சத்தமில்லாமல் ஷமி படைத்த மாபெரும் சாதனை!

DC-க்கு எதிரான ஆட்டத்தில் LSG வீரர் ஷமி, முதல் பந்திலேயே KL ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் ஷமி விக்கெட் வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 3 முறை இச்சாதனையை நிகழ்த்தி, பிரவின் குமார், உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், லஷித் மலிங்கா, புவனேஷ்வர் குமார், அஷோக் திண்டா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர்.
Similar News
News April 13, 2026
125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் ராணுவ தளபதி

ஆஸி., ராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டு கால அனுபவம் கொண்ட Lt. Gen சூசன் கோயல் வரும் ஜூலை மாதம் பொறுப்பேற்கிறார். இவர் ஆப்கன் & மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் பாராட்டியுள்ளார்.
News April 13, 2026
ரீல்ஸ் Vs ரியல் வாழ்க்கை

நம்முடைய ஃபோன் திரையில் ஒளிரும் அழகிய ரீல்கள் நிஜ வாழ்க்கையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுகின்றன. நாம் பார்க்கும் ரீல்ஸ் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு, ஃபில்டர் போட்டு வெளியிடப்படுகின்றன. இதைப்பார்த்து ‘என்னுடைய வாழ்க்கை இப்படி இல்லையே’ என்ற ஒப்பீடு மன அழுத்தத்தை உண்டாக்கும். உங்கள் வாழ்க்கையை ரீலுக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சிப்பதை தவிர்ப்பது மன ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
News April 13, 2026
சென்னையில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு தயாராகி வரும் சென்னை மாணவர்களுக்கு முன்கூட்டியே மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்.15) சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான வகுப்புகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்வதால், மாணவர்களுக்கு லீவு விடப்பட்டுள்ளது. ஏப்.17 முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.


