News May 20, 2024

திருச்சியில் நேற்று பெய்த மழை விவரம்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று (19.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 36.2 மி.மீட்டர், விமான நிலையம் 12 மி.மீட்டர்,
திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 16 மி.மீட்டர், டவுன் 11.3 மி.மீட்டர் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 460 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 19.17 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 5, 2026

திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

image

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திருச்சி: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல், சோளம், எள் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி பயனடையுமாறு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

திருச்சி: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

error: Content is protected !!