News May 20, 2024
அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: EPS

கோவையில் மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் புகைப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து வருவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
Similar News
News March 24, 2026
தஞ்சை: டிடிவி தினகரன் புகைப்படம் எரிப்பு

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளின் உத்தேச பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி இடம்பெறவில்லை. இதனால் வாய்ப்பு இழந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் சாக்கோட்டையில் டிடிவி தினகரன் புகைப்படத்தை கொளுத்தி கண்டனம் தெரிவித்து, ரெங்கசாமியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
News March 24, 2026
மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 24, 2026
நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.


