News May 20, 2024
ஆம்பூர்: தேனி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தார் மாமலை காட்டில் தேனீ எடுக்க சென்றார். அப்போது தேனி கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை நண்பர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
Similar News
News September 8, 2025
திருப்பத்தூர்: சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News September 8, 2025
திருப்பத்தூர் பெயர் காரணாம் தெரியுமா …?

திருப்பேரூர் என்பதிலிருந்து இந்தப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, திரு என்றால் புனிதமான, பத்து ஊர் என்றால் பத்து ஊர்கள். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களை இணைத்து இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆதியூர்(ஆதி-தொடக்கம்)&கோடியூர்(கோடி-முடிவு) என்ற 2கிராமங்கள் இந்தத்தொகுதியின் இருபுறமும் அமைந்துள்ளன. இதன் காரணமாகவும், “பத்து ஊர்” என்ற பெயர் வந்திருக்கலாம்.
News September 8, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ஏ. நல்லதம்பி (தி.மு.க) – திருப்பத்தூர் – 96,522 வாக்குகள்
▶ ஜி. செந்தில் குமார் (அ.தி.மு.க) -வாணியம்பாடி – 88,018 வாக்குகள்
▶ஏ.சி. வில்வநாதன் (தி.மு.க) – ஆம்பூர் – 90,476 வாக்குகள்.
▶க. தேவராசு (தி.மு.க) – ஜோலார்பேட்டை – 89,490 வாக்குகள்.
ஷேர் பண்ணுங்க