News May 20, 2024
ஈரான் அதிபர் மரணத்தில் சதி?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். போர் நடைபெற்று வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. காஸாவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்ததால், அது பிடிக்காத யாரோ செய்த சதியால் விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதனால், #Mossad என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Similar News
News September 14, 2025
பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது: உத்தவ் தாக்கரே

ஆசிய கோப்பையில் பாக். உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நம் ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை தியாகம் செய்துகொண்டு இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போட்டியை புறக்கணிப்பது, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
News September 14, 2025
ஹிட்லர் பொன்மொழிகள்

*எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை. *இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே. *தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். *உனது எதிரியை நீ விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்துகொள்கிறாய். *எவராலும் வெற்றியைத் தாங்கிகொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்கமுடியும்.
News September 14, 2025
LCU-ல் தொடர்ந்து நடிப்பேன்: சாண்டி

LCU-ல் தனது கதாபாத்திரம் தொடரும் என சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் தனது கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இருந்தாலும், ப்ரீக்வெல் படங்களில் தொடர்வேன் என்று அவர் கூறியுள்ளார். தானும், மிஷ்கினும் வேறு LCU படங்களில் நடிப்போம் என்றும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் எனவும் பேசினார். லியோ கதை சொல்லும் போதே லோகேஷ் இதை உறுதிப்படுத்தியதாகவும் சாண்டி கூறினார்.