News May 20, 2024

இன்று இந்திய பங்குச்சந்தைகள் விடுமுறை

image

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆகியவற்றிற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகங்களை வேறு நாளுக்கு தள்ளி வைக்குமாறு வர்த்தகர்களுக்கு பங்குச்சந்தைகள் அறிவுறுத்தியுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மதியம் 3.15 மணி வரை பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறும்.

Similar News

News March 19, 2026

ரம்ஜான் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

ரம்ஜான் விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சென்னை – குமரி இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு குமரி செல்லும் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மறுமார்க்கத்தில் 22-ம் தேதி இரவு 11.25-க்கு புறப்பட்டு ரயில், அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு ரயில் சென்னையை வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை தொடங்கவுள்ளது. SHARE

News March 19, 2026

இனி மழை அப்டேட் கொடுக்கப் போவது இவர்தான்!

image

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை நியமிக்கப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மையத்தில் 1992-ல் சேர்ந்த இவர், சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்கவர். இதையடுத்து, தென்மண்டல வானிலை மையத் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்துவந்த அமுதா இப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News March 19, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் தீவிரமாக களப்பணியாற்றுமாறு அவரிடம் EPS அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த J கிருஷ்ணமூர்த்தியும் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.

error: Content is protected !!