News April 1, 2026
முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News April 8, 2026
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 8, 2026
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – விஜய்

நெல்லை பாளையங்கோட்டையில் தவெக தலைவர் தற்போது பேசி வருகிறார். அப்போது பேசிய விஜய் “ திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்றானே அதற்கு பதில் என்ன? என்றார். மேலும் “ இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய பள்ளி சிறுமி உயிர் பறிபோனது, இதற்கு பதில் என்ன ஸ்டாலின் சார்? என கேள்வி எழுப்பினார்.
News April 8, 2026
கரூர் துயரத்தில் என் மீது பழி போட்டார்கள் – விஜய்

நெல்லை மாவட்டம் பாளையில் தவெக தலைவர் விஜய் தற்போது பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “
கரூர் துயரத்தில் என் மீது பழி போட்டாலும் மக்கள் என் பக்கம் இருந்தார்கள். வேறு என்ன செய்யலாம் என யோசித்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அதுவும் எடுபடவில்லை” என்றார். மேலும் “விஜய்க்கு மட்டும் தனி கண்டீசன் போட்டு மக்களை சந்திக்க விடாமல் செய்யலாம் என யோசித்தார்கள் அதுவும் எடுபடவில்லை” என்றார்.


