News May 20, 2024
திருப்பூரில் காலாவதியான பொருட்கள் விற்பனை!

திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு சில டிபார்ட்மெண்ட் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பாக்கெட் பொருட்கள், குளிர்பானங்கள் காலாவதி தேதி முடிந்த பின்னும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் கவனக்குறைவாக வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
News March 5, 2026
திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


