News May 20, 2024

திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து

image

வாலாஜா தாலுகா வேப்பூர் கிராமத்தில் நேற்று இரவு கோயில் திருவிழா நடந்தது. தொடர்ந்து இரவு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வமணி (20), ஜீவா(20) ஆகியோருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வமணி, ஜீவாவை கத்தியால் குத்தினார். அங்கிருந்தவர்கள் ஜீவாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிஎம்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Similar News

News March 11, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

இராணிப்பேட்டை: மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் SP பே.சிபின் தலைமையில் இன்று மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொலை, கொள்ளை வழக்குகள், ரவுடிகள் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள பிடிகட்டளைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ​பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உரிய தண்டனை பெற்றுத்தரவும், கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் மற்றும் மணல் கடத்தலைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 10, 2026

ராணிப்பேட்டை: வங்கியில் வரிசையில் நிற்க வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!