News May 20, 2024
ராமநாதபுரம்: ஒரே நாளில் இங்கு இவ்வளவு மழையா?

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கமுதி 124.40 மிமீ, முதுகுளத்தூர் 48 மிமீ, மண்டபம் 14, பாம்பன் 13.90, கடலாடி 13, ராமேஸ்வரம் 9, தங்கச்சிமடம் 8.60, பரமக்குடி 5.90, வாலிநோக்கம் 2.60,
ராமநாதபுரம் 2 மிமீ மழை பெய்துள்ளது.
Similar News
News March 11, 2026
இராமநாதபுரம்: 7 உயிர்கள் பலி; வெறிநாய்கள் அட்டூழியம்

இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அய்யன் தோப்பு பகுதியை சேர்ந்த நைய்னாமுகமது என்பவர் ஆடு வளர்த்து வந்தார். அவர் நேற்று இரவு பட்டியில் 8 ஆடுகளை அடைத்து இருந்தார். இரவில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 1 ஆடு காயத்துடன் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிர்வாகத்தினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.
News March 10, 2026
ராமநாதபுரம்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
ராமநாதபுரம்: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


