News May 20, 2024
எதேச்சதிகார பாஜக அரசை வீழ்த்த வேண்டும்: அகிலேஷ்

பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை மக்கள் அனுபவிப்பதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்னைகளில் இருந்து விடுபட மக்களுக்கு தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதைப் பயன்படுத்தி எதேச்சதிகார பாஜக அரசை வீழ்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 11, 2026
OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
News March 11, 2026
காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக, டெல்லியில் CEC ஞானேஷ் குமார் இன்று ஆலோசனை செய்கிறார். இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 15-ல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


