News May 20, 2024
முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே இளைஞர் கைது

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் சந்தோஷ் என்பதும், மதுபோதைக்கு தான் அடிமையாகி விட்டதால், என்னை போன்று வேறு யாரும் குடிக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகள் மூட முதல்வரிடம் நேரில் வலியுறுத்த வந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 3, 2026
IPL: முதல் வெற்றியை பெறுமா CSK?

IPL-ல், இன்று CSK, PBKS அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. RR-க்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த CSK, தொடரின் முதல் வெற்றியை உள்ளூரில் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் CSK வீரர்கள் ஜொலித்தாலே போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர். பிரெவிஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. PBKS அணியும் வலுவாக இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
News April 3, 2026
மோடியின் வருகை = திமுகவின் வெற்றி: ஸ்டாலின்

வெளிநாட்டில் வாழும் PM மோடி, தேர்தல் சீசனில் மட்டுமே தமிழகம் வருவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த ஸ்டாலின், 2024 தேர்தலில் PM மோடி ரோடு ஷோ நடத்திய போது திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இம்முறையும் அவர் ரோடு ஷோ நடத்தினால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் இலக்கு உறுதியாகிவிடும் எனவும் ஸ்டாலின் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 3, பங்குனி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


