News May 20, 2024
பாதாள சாக்கடையில் சிக்கிய அரசு பேருந்து

கோவை சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது.,சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையில் மண் ஊறியிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற அரசு பேருந்து அதில் சிக்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Similar News
News August 21, 2025
கோவையில் 56 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.
News August 21, 2025
கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
கோவையில் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவை மாவட்டத்தில் இணையதள மோசடி மூலம் நாள்தோறும் பலா் பல லட்சம் ரூபாயை இழந்து வருகின்றனா். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, இணையதள வா்த்தகம், ஆன்லைன் டாஸ்க் என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. அதன்படி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி நடந்ததாக புகாரின் பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.