News May 20, 2024

APPLY NOW: தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி

image

இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <>TNSchools<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 29, 2025

விஜய் அரசியல் வருகை.. புதிய கருத்துக்கணிப்பு

image

விஜய் அரசியல் வருகையால் பல அரசியல் கட்சிகளின் வாக்கு பிரியும் இந்தியா டுடே, சி வோட்டார் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், INDIA கூட்டணி வாக்கு வங்கி 52% (பிப்ரவரி கணிப்பு)-லிருந்து 48% ஆக குறையும். 2024 தேர்தலில் 18% வாக்குகளைப் பெற்ற பாஜக, தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் 37% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

மூலிகை: நன்மையை வாரி வழங்கும் ‘வல்லாரை கீரை’

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤வல்லாரை கீரை கொண்டு பல் துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கரைகள் நீங்கும்.
➤அஜீரணக் கோளாறுகள், மங்களான பார்வை குணமாகும்.
➤வல்லாரை இலையை கழுவி, நன்கு மென்று முழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய் நாற்றம் போன்றவை நீங்கும்.
➤ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் வல்லாரை கீரையை சாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். SHARE IT.

News August 29, 2025

மாற்றம் உண்டாகும்.. தேமுதிக சிக்னல்

image

விஜய் கட்சி தொடங்கியது முதலே, தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என பலரும் கூறி வருகின்றனர். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என TTV தினகரனும் கூறியிருந்தார். இந்நிலையில், இதே கருத்தையே பிரேமலதாவும் முன்னிறுத்தியுள்ளார். 2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மீண்டும் நடைபெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே DMDK உடன் TVK கைகோர்க்கவுள்ளதாக பேசப்படும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!