News May 20, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வுபெற வேண்டும் – ராகுல் காந்தி
*கெஜ்ரிவாலிடம் இருந்து டெல்லியை மீட்க வேண்டும் – அண்ணாமலை
*மியான்மரின் மேற்கு மாகாணத்தின் ஒரு பகுதியை அராக்கன் படை கைப்பற்றியது.
*இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்வெரேவ் வென்றார்.
*நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் கணினி சந்தையில், 30.7 லட்சம் கணினி சாதனங்கள் விற்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
ஆதவ் எனக்கு யாருனே தெரியாது: நயினார்

பாஜக யாரோடும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, அவர்களும் (தவெக) எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்று நயினார் தெரிவித்துள்ளார். 90 சீட், து.முதல்வர் பதவி தருவதாக டெல்லி கட்சி கூறியது என்று ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ஆதவ் யாரென்றே தனக்கு தெரியாது என்று நயினார் பதிலளித்துள்ளார். ஜன நாயகன் பட விவகாரத்திற்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் கூறினார்.
News March 19, 2026
அமெரிக்க ராணுவ தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

ஈரானுடனான போர் தீவிரமாகியுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் மெக்நேயர் ராணுவ தளத்தின் மேல் மர்ம ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. US-ன் முக்கிய அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும் அங்கு வசித்து வரும் நிலையில் மர்ம ட்ரோன்கள் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக US மத்திய கட்டளை மையத்தின் தலைமையகம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2026
கட்சி தாவிய ஒரு நாளில் தேர்தலில் போட்டியிட சீட்

அசாம் மாநிலத்தில் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த MP பிரத்யுத் போர்டோலோய்-க்கு ஒரே நாளில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் திஸ்பூர் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.


