News May 20, 2024

மோடி பயோ பிக்கில் சத்யராஜ் நடிக்க வேண்டும்

image

பிரதமர் மோடியின் பாசிச முகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவரது பயோ பிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், புரட்சிகர எண்ணம் கொண்ட சத்யராஜ் உண்மையில் ஒரு ஹீரோதான். மோடியின் கதையில் சத்யராஜ் நடிக்கலாம். அது அவருடைய தொழில், அதில் எந்த தவறுமில்லை” எனக் கூறினார்.

Similar News

News March 11, 2026

விருதுநகர்: போலீசில் சிக்கிய போலி மருத்துவர்

image

வத்திராயிருப்பு தாலுகா அயன்கரிசல்குளம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் வீட்டில் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. இதன் அடிப்படையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்த போது, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து வைரமுத்துவை கைது செய்தனர்.

News March 11, 2026

6 வருடங்களுக்கு முன்.. இன்று என்ன நாள் தெரியுமா?

image

2020-ல் இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

News March 11, 2026

கேஸ் இல்லாமல் இந்த காலை உணவை செய்யலாம்!

image

சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இச்சூழ்நிலையில் எரிவாயுவை சேமிப்பது நல்லது. அடுப்பை பற்றவைக்காமலேயே நீங்கள் உணவை தயாரிக்க முடியும். அதன்படி தோசை, பூரி, வடைக்கு பதிலாக, சாலட்டுகள், சாண்ட்விச்கள், முளைகட்டிய உணவுகள், பழங்கள், ரொட்டி-ஜாம் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடலாம். இவை உங்கள் சிலிண்டரை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் காப்பாற்றக்கூடிய உணவுகளே. SHARE IT.

error: Content is protected !!