News May 20, 2024
களையெடுப்புக்கு தயாராகும் சீமான்?

மக்களவைத் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய கட்சி நிர்வாகிகளின் பட்டியலை திமுக, அதிமுக போல நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்திருக்கிறது. அத்துடன், ரகசியக் குழுக்கள் மூலமாக களத்தில் இருந்து ரிப்போர்ட் ஒன்றையும் சீமான் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், நாதகவின் அமைப்பு முறையிலேயே ஒருசில மாற்றங்கள் கட்டாயம் கொண்டு வரவேண்டியுள்ளதை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
Similar News
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
News March 11, 2026
தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.


