News May 20, 2024
CISF வசம் ஒப்படைக்கப்படும் நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு சி.ஆர்.பி.எஃப் வசமிருந்து மத்திய சி.ஐ.எஸ்.எஃப் பொறுப்பில் இன்று (மே 20) ஒப்படைக்கப்படவுள்ளது. இவ்வமைப்பில் 3.300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த 10 நாள்களாக சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு பதவியேற்கும்போது, அங்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 10, 2026
FLASH: விலை ₹65,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

மார்ச் மாத சலுகையாக Skoda நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. அந்நிறுவனம் பல்வேறு மாடல் காருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோஸை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
News March 10, 2026
பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.
News March 10, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.


