News May 19, 2024

அசம்பிளீஸ் ஆப் காட் சபை புதிய கட்டிடம் திறப்பு விழா!

image

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அமைந்துள்ள கைதக்குழி அசம்பிளீஸ் ஆப் காட் திருச்சபையின் புதிய கட்டட திறப்பு விழா இன்று (மே-19) நடைபெற்றது. நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பர்ட் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  உடன் சபை போதகர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News

News March 10, 2026

குமரி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி வில்சன்(56).  இவர் அருகில் உள்ள வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச்சென்றார். அப்போது மரத்தில் ஏறும்போது தென்னை ஓலை அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து வில்சன் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 10, 2026

குமரி: சிலிண்டர் புக் செய்ய முடியாமல் மக்கள் அவதி

image

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!