News May 19, 2024
சென்னையில் ஆசிட் வீசி தாக்குதல்

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
பள்ளியில் மாணவி மரணம்.. தமிழகத்தில் ஷாக்

தென்காசி, புளியங்குடியில் பள்ளி வளாகத்துக்குள் கார் மோதியதில் LKG மாணவி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் 17 மணிநேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகத்துக்குள் கார் வேகமாக வந்தது எப்படி? ஓட்டிவந்தது யார் என்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
News March 25, 2026
பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது: ECI

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், சோதனையின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ செலவுக்கு ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு போனால் சிகிச்சை பெறுபவரின் விவரங்களை செல்போனில் காண்பித்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தொகுதிப்பங்கீடு சர்ச்சைக்கு ஸ்டாலின் பதிலடி

CPM, CPI உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை கிள்ளிக்கொடுத்த திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேதிமுகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்பிட சிலர் முயற்சி செய்கிறார்கள்; திசைதிருப்ப நினைக்கும் இதுபோன்ற வதந்திகளை திமுகவினர் கொண்டுகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


