News May 19, 2024
RTE இலவச கல்வி சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இத்திட்டத்தின் கீழ் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும். தமிழகத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் 1,10,000 இடங்கள் உள்ளன. இதில் சேர நாளைக்குள் (மே 20), rte.tnschools.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே 27இல் தகுதியானவர் விவரம் அறிவிக்கப்படும்.
Similar News
News March 28, 2026
விஜய் கொலை மிரட்டல் விடுக்கிறார்: பொன்ராஜ்

தவெகவில் உள்ள பெண்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக பொன்ராஜ் மீது விஜய்யே நேரடியாக சென்று புகாரளித்தார். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் விஜய் மீது பொன்ராஜும் ஒரு புகார் அளித்துள்ளார். தவெக தொண்டர்கள் மூலம், விஜய் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் வீடியோவை திரித்து எடிட் செய்து தவெகவினர் பரப்புவதாகவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,840 உயர்ந்தது

தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் ஆபரணத் தங்கம் ₹230 உயர்ந்து ₹13,660-க்கும், 1 சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,09,280-க்கும் விற்பனையாகிறது. டிரம்ப்பின் <<19487197>>10 நாள்<<>> போர் நிறுத்த கெடுவால் வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News March 28, 2026
தமிழகத்தில் மொத்தம் எத்தனை கட்சிகள் உள்ளன தெரியுமா?

தமிழகத்தில் 307 கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட்டில் தெரிவித்திருந்தது. இதில் திமுக, அதிமுக, காங்., பாஜக, தேமுதிக, நாதக, விசிக, CPM, CPI, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விசிக ஆகிய 12 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக 295 கட்சிகள் உள்ளன. தவெக, பாமக, அமமுக போன்றவை இந்த லிஸ்ட்டில்தான் உள்ளன.


