News May 19, 2024
ரீ-ரிலிஸாகும் ‘படையப்பா’?

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட படம் ‘படையப்பா’. இதில், ரஜினியின் நடிப்பு, ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. தற்போது ரீரிலிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், இப்படத்தை ரீரிலிஸ் செய்வது குறித்து ரஜினியுடன் தயாரிப்பாளர் தேனப்பன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
Similar News
News March 10, 2026
BREAKING: இந்திய அணிக்கு ₹131 கோடி பரிசு

T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி பரிசு அறிவித்துள்ளது. இந்த பரிசுத் தொகை அணியின் 15 வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் பிற துணை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். வெகுமதித் தொகையில் பெரும்பகுதி வீரர்களுக்கும், துணை ஊழியர்களின் தொகை அவர்களது படிநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
News March 10, 2026
ஒரு லிட்டர் ஆயில் கூட வெளியே வராது: ஈரான்

<<19342545>>எண்ணெய் கப்பல்களை தடுத்தால்<<>> கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்தால் எதிரி நாடுகளின் கச்சா எண்ணெயை ஒரு லிட்டர் கூட வெளியே விடமாட்டோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே எண்ணெய் விலைகள் உயரும் என்று கவலையில் உள்ள நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
News March 10, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


