News March 31, 2026

IPL டாஸ்: GT பேட்டிங்

image

GT-க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற PBKS, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நியூ சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரேயஷ் தலைமையிலான PBKS அணி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், கில்லின் GT-யும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலமாக உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Similar News

News April 6, 2026

கிருஷ்ணகிரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

துரைமுருகன், சௌமியா சொத்து மதிப்பு இவ்வளவா?

image

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் சொத்து மதிப்பு ₹11.5 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் ₹59 கோடி சொத்து உள்ளதாம். அதேபோல், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு ₹65.94 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ₹4.26 கோடி மதிப்பிலான 2,927 கிராம் தங்கமும் அவரிடம் இருக்கிறதாம்.

News April 6, 2026

விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய 2 விஜய்கள்

image

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் 2 வேட்பாளர்கள் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஜோசப் என்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தவெகவின் விசில் சின்னம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் பெயர் குழப்பம் எதுவும் ஏற்படாது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!